கனடாவில் பேக்கரி ஓவனுக்குள் இறந்துகிடந்த இந்திய இளம்பெண்: புகைப்படம் வெளியானது
னேடிய மாகாணமொன்றில், வால்மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்றில், இந்திய இளம்பெண்ணொருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், அவரது பெயர், புகைப்படம் முதலான விவரங்கள் வெளியாகியுள்ளன.
பேக்கரி ஓவனுக்குள் இறந்துகிடந்த இளம்பெண்
கனடாவின் Halifaxஇல் அமைந்துள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்றின் பேக்கரி பிரிவில், ஆள் நடக்கும் அளவிலான பெரிய ஓவன் ஒன்றிற்குள் ஒரு இளம்பெண் உயிரிழந்துகிடந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் அந்த பல்பொருள் அங்காடிக்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சென்று பார்க்கும்போது, அந்த அவனுக்குள் கிடந்த அந்த இளம்பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டிருக்கிறார்.
விவரங்கள் வெளியாகின
தற்போது, அந்த இளம்பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அத்துடன், அவரது பெயர் குர்சிம்ரன் கௌர் (Gursimran Kaur, 19) என்பதும் தெரியவந்துள்ளது.
கனடாவின் Halifaxஇல் அமைந்துள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்றின் பேக்கரி பிரிவில், ஆள் நடக்கும் அளவிலான பெரிய ஓவன் ஒன்றிற்குள் குர்சிம்ரனுடைய உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குர்சிம்ரனுடைய தாயும் அதே பல்பொருள் அங்காடியில்தான் வேலை செய்கிறார் என்றும், அவர்தான் தன் மகளுடைய உயிரற்ற உடலைக் கண்டுபிடித்தார் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குர்சிம்ரனும், அவரது தாயும் இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானா நகரத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவரும் பிரித்தானியாவிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்துள்ளார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்குமுன் இருவருக்கும் அந்த பல்பொருள் அங்காடியில் வேலை கிடைத்துள்ளது.
இந்த துயர சம்பவம், அப்பகுதி மக்கள், சீக்கியர்கள் மற்றும் இந்திய மக்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், பொலிசார் அந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.