தினமும் பூண்டு உட்கொள்ளும் ஒருவருக்கு இதய நோய் வருமா?
பொதுவாக சமையலறையில் இருக்கும் பொருட்களை கொண்டு எமக்கு வரும் தீராத நோய்களை குணப்படுத்தலாம்.
அந்த வரிசையில் நாள்ப்பட்ட நோய்களை குணமாக்கும் வேலையை பூண்டு செய்கின்றது.
அதாவது, நீண்ட காலமாக குறைக்க முடியாத கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் திறன் பூண்டுக்கு உள்ளது. அத்துடன் பூண்டில் இருக்கும் காரமான தன்மை அல்லிசின் எனப்படும் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றது.
உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு நிச்சயம் இதயம் சார்ந்த நோய்கள் வரலாம். இப்படியானவர்கள் பூண்டு வைத்தியம் செய்வது சிறந்தது.
ஏனெனின் உடம்பில் இருக்கும் கொழுப்புக்கள் லிப்போபுரோட்டீன் பிளேக் உருவாகுவதற்கான காரணியான தமனிகளில் அடைப்பை உருவாக்குகிறது, இதன் விளைவாக சில சமயங்களில் மாரடைப்பு ஏற்படலாம். மாறாக இவ்வளவு பிரச்சினைகளையும் குறைக்க நினைப்பவர்கள் அவர்களின் உணவில் பூண்டு சேர்த்து கொள்வது நல்லது.
அந்த வகையில் உணவில் பூண்டு சேர்ப்பதன் முக்கியத்துவத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தினமும் எவ்வளவு பூண்டு உட்கொள்ளலாம்?
கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் தினமும் 1 முதல் 2 பல் பச்சை பூண்டை உண்ணலாம். இந்த அளவில் பச்சை பூண்டு எடுத்து கொள்வதால் ஆரோக்கிய பலன்கள் அதிகமாக கிடைக்கும்.
பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
1. வழக்கமாக பூண்டை உட்கொள்ளும் பொழுது மொத்த கொழுப்பும் நாளடைவில் கரைந்து விடும்.
2. தினமும் சாப்பிடுவதால் இரத்த ஓட்டத்தில் இருந்து குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு வெளியேறும் அதே சமயம், நல்ல கொழுப்பு HDL (உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம்) அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
3. இரத்த அழுத்தம் பிரச்சினையால் அவஸ்தைப்படும் ஒருவர் பூண்டை மருந்தாக எடுத்து கொள்ளலாம். அத்துடன் இதயம் சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பூண்டு சாப்பிடுவதால் ஆரோக்கியம் பெறுவார்கள்.
பூண்டு எடுத்து கொள்ளும் வழிகள்
1. காய்கறிகள் சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.
2. பூண்டு போட்டு தண்ணீர் குடிக்கலாம்.
3. ரசம் செய்து குடிக்கலாம்.
4. பூண்டு குழம்பு செய்து சாப்பிடலாம்.
5. பூண்டு பொரியல் செய்து சாப்பிடலாம்.
6. பூண்டு துவையல் செய்து சாப்பிடலாம்.