;
Athirady Tamil News

உக்ரைனுக்கு விழுந்த பேரிடி: ரஷ்யாவுடன் இணைந்த வடகொரியா

0

உக்ரைன் (Ukraine) – ரஷ்ய (Russia) போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரியா (North Korea) தங்களின் இராணுவத்தை அனுப்பி வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும் போர் நிற்கவில்லை.

போர் ஆயுதங்கள்
மேலும் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருகிறது என ரஷ்யா குற்றம்சாட்டியது.

இந்நிலையிலேயே ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரியா தங்களின் இராணுவத்தை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனுடன் போரிடுவதற்காக ரஷ்யாவிற்கு உதவ 12,000 இராணுவ வீரர்களை அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளது.

இராணுவத்தின் ஆதரவு
முதல் கட்டமாக 3,000 வடகொரிய வீரர்கள் கடந்த சில நாளுக்கு முன் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இரு நாட்களுக்குள் வடகொரிய ராணுவத்தை ரஷ்யா, உக்ரைன் போரில் பயன்படுத்தும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.

வடகொரிய இராணுவத்தின் ஆதரவு, ரஷ்யாவின் போராட்டவலிமையை மேலும் வலுப்படுத்தும் என்ற அச்சத்தைக் கொண்டுவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.