சர்வதேசத்தை கலங்கவைத்த காசா சிறுமி : வைரலாகும் காணொளி
காசாவில் (Gaza) ஆறு வயது சிறுமி ஒருவர் தனது சகோதரியை மருத்துவமனையிலிருந்து தெற்கு காசாவில் உள்ள கூடாரம் வரை முதுகில் சுமந்து செல்லும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கமர் எனும் குறித்த சிறுமி அல் – புரேஜ் முகாமில் தனது தாயுடன் வசித்து வருகிறார்.
இந்த காணொளியில் அந்த சிறுமி “முகாம் மீது குண்டுகள் விழுந்தன, நாங்கள் சிதறி ஓடினோம். அதில், என் தங்கை பிரிந்து சென்றுவிட்டாள்.
அவள் ஓடிவிட்டாள. அதனால், அவளை அழைத்துக்கொண்டு அல் – மவாசிக்கு சென்றேன். அது தொலைவில் உள்ளது. அவளை சுமந்து சென்ற போது, ஒருவர் காரை நிறுத்தி உள்ளே ஏறுங்கள் என்றார்.
பிறகு அவர் சகோதரிக்கு என்ன ஆனது ஏன் சுமந்து செல்கிறீர்கள் என்றார். என் தங்கை மீது கார் மோதியது அதனால் சுமந்து செல்கிறேன் என குறித்த சிறுமி தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த காணெளி சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.