கொம்பில் மரக்கிளையை நுட்பமாக சிக்கவைத்து அகற்றும் மான்…. ஏன் இவ்வாறு செய்கிறது?
மானொன்று தனது கொம்பில் நுட்பமான முறையில் மரக்கிளையை சிக்கவைத்து அகற்றும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
பொதுவாகவே மனிதர்களுக்கு வனவிலங்குகளின் செயற்பாடுகளை பார்ப்பதில் அலாதி இன்பம் இருக்கின்றது.
அதனால் தான் இணையத்தில் விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பான காணொளிகளுக்கு அமோக வரவேற்பு காணப்படுகின்றது.
நாள்தோறும் இணையத்தில் வனவிலங்குகள், பறவைகள் மற்றும் பாம்புகள் சம்பந்தப்பட்ட ஏராளமான காணொளிகள் பதிவேற்றப்படுவதும் இவற்றில் சில வைரலாவதும் வழக்கம்.
அந்த வகையில் மானொன்று தனது கொம்பில் நுட்பமான முறையில் மரக்கிளையை சிக்கவைத்து அகற்றும் அரிய காட்சி வைரலாகி வருகின்றது. இவை ஏன் இவ்வாறு செய்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா?
மான்கள் தங்கள் கொம்புகளில் மென்மையான தோலான வெல்வெட்டை உதிர்ப்பதால்,அவை அடிக்கடி மரங்கள் மற்றும் கிளைகளில் இவ்வாறு உராய்ந்து எரிச்சலைக் குறைக்கும்.
வெல்வெட் தோலுக்கு அடியில் உள்ள கடினமான எலும்பை வெளிப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்துவதற்காகவே மான்கள் இவ்வாறு செய்வதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.