;
Athirady Tamil News

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.., தவெக கொள்கை பாடல் வெளியீடு

0

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது.

இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வருகை தந்துள்ளனர்.

விஜய் நடந்துவரும் பாதையின் இருபுறமும் தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தவெக கட்சிக் கொடி வடிவிலான துண்டுகளை ரசிகர்கள் மேடை மீது வீச அதை அன்போடு எடுத்து தனது தோளில் அணிந்துகொண்டார்.

இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது.

வெற்றி வாகை என தொடங்கும் இப்பாடலில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகள் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இப்பாடலை விஜயுடன் இணைந்து தெருக்குரல் அறிவு பாடியுள்ளார்.

இப்பாடலில் பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று, சாதி, மத, பாலின வேறுபாடற்ற மதசார்பற்ற சமத்துவ சமூகத்தை படைப்போம் என்று விஜய் பேசியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.