இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்:பலர் படுகாயம்
இஸ்ரேலின்(israel) தலைநகர் ரெல் அவிவ் இன் வடக்கு பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை(27) காலைவேளை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த தாக்குதலில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், ஏழு பேர் மிதமான காயமடைந்ததுடன் 20 பேர் லேசான காயமடைந்தனர்.
பேருந்து நிறுத்தத்தில் நடந்த தாக்குதல்
டெல் அவிவின் வடக்கே, மத்திய இஸ்ரேல் படைத்துறையின் க்ளிலோட்(Glilot) தளத்திற்கு வெளியே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மக்கள் மீது டிரக்கை மோதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த டிரக்கின் அடியில் 8 பேர் சிக்கிக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சாரதி “நடுநிலைப்படுத்தப்பட்டார்”
தாக்குதலை அடுத்து ட்ரக் சாரதி ஆயுதமேந்திய பொதுமக்களால் சுட்டு “நடுநிலைப்படுத்தப்பட்டார்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையின் ஆரம்ப விசாரணையின்படி, பயணிகளை இறக்குவதற்காக ஒரு பேருந்து நிலையத்திற்கு வெளியே நின்றது, அந்தநேரம் வந்த டிரக் அங்குள்ள மக்கள் மீது மோதியதாக தெரிய வந்துள்ளது.
זירת האירוע בגלילות >>> pic.twitter.com/z8yqwrjedS
— משטרת ישראל (@IL_police) October 27, 2024