;
Athirady Tamil News

பாலில் வாழைப்பழம் போட்டு சாப்பிட்டால் என்ன பலன்?

0

இன்றைய அவசர உலகில் நம்மை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது கடினமாக இருக்கலாம்.

ஆனால் பால் மற்றும் வாழைப்பழத்தை காலையுணவாக சாப்பிடும் பொழுது ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன. பல மனிதர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இவை இரண்டிலும் நிரம்பியுள்ளது.

காலையை விட இரவு வேளைகளில் வாழைப்பழம் சாப்பிட்டால் ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன.

அந்த வகையில் பால் மற்றும் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

வாழைப்பழம், பால் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
1. பாலில் இருக்கும் கால்சியம் சத்து எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தில் பெரிதும் பங்களிப்பு செய்கின்றது. தசைகளுக்கு தேவையான புரதம், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் வேலையை பால் செய்கின்றது. இதனை காலை வேளையை விட இரவில் எடுத்து கொள்வது சிறந்தது. அத்துடன் வைட்டமின் ஏ, டி மற்றும் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன.

2. வாழைப்பழம் இருக்கும் பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்கிறது. இரவு வேளையில் வாழைப்பழம் சாப்பிடும் ஒருவருக்கு கால்சியம், இரும்பு, மாக்னீசியம், பொட்டாசியம், நியாசின் மற்றும் ஃபோலிக் அமிலத்துடன் வைட்டமின்கள் ஏ, பி, சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.

3. செரிமானத்திற்கான நார்ச்சத்து வாழைப்பழத்தில் அதிகமாக உள்ளது.

4. சரும ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் சி பால் மற்றும் வாழைப்பழத்தில் அதிகமாக உள்ளது. இதனால் சரும ஆரோக்கியம் மேம்படுகின்றது.

5. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டசத்துக்களும் இவை இரண்டில் உள்ளது. பால், வாழைப்பழம் சேர்த்து சாப்பிடும் பொழுது ஆற்றல் அதிகரிக்கும்.

6. உடல் எடை அதிகரிப்பதில் சிக்கல் உள்ளவர்கள், பால் மற்றும் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு முன் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் எடை அதிகரிக்கும். அத்துடன் ஒரு கிளாஸ் பாலில் வாழைப்பழங்கள், தேன் மற்றும் உலர் பழங்களை கலந்தும் சாப்பிடலாம். இதுவும் பலன் தரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.