உச்சத்தை உதறிட்டு வந்திருக்கேன்; உங்களை மட்டுமே நம்பி.. விஜய் ஆக்ரோஷம்!
உங்களை மட்டுமே நம்பி வந்திருப்பதாக விஜய் பேசியுள்ளார்.
தவெக மாநாடு
நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி நிறுவப்பட்டு, அதன் முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய தவெக தலைவர் விஜய், ”ஒரு சாதாரண இளைஞனாக இருந்த விஜய் ஒரு நடிகனாக மாறினான். அந்த நடிகன் ஒரு வெற்றி பெற்ற நடிகனாக மாறினான். அவன் பொறுப்புள்ள மனிதனாக மாறினான். அந்த பொறுப்புள்ள மனிதன், ஒரு பொறுப்பான தொண்டனாக மாறினான்.
இன்று பொறுப்பான தொண்டனாக இருக்கும் அவன் நாளைக்கு.. அதை நான் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இப்போது என்னை அரசியல் களத்திற்கு அழைத்து வந்திருக்கிறீர்கள். எப்போதும் போல ஓய்வின்றி உழைப்பேன். அதற்கான ரிசல்ட் உங்கள் ஒவ்வொருவரின் கை விரலிலும் இருக்கும்போது எனக்கென்ன கவலை.
விஜய் ஆக்ரோஷம்
எல்லாமே நல்லாவே வொர்க்- அவுட் ஆகும் பாருங்க. தனது கரியரின் உச்சத்தை உதறிவிட்டு, அந்த ஊதியத்தை உதறிவிட்டு, உங்கள் விஜய்யாக உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கிறேன். நம்பி நடப்போம்! நம்பிக்கையோடு நடப்போம்! தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டு அரசியலின் புதிய திசையாகவும்,
புதிய விசையாகவும் மாறி அத்தனை அரசியல் அழுக்குகளையும் அடித்து துவைத்து நீக்கும். அதனை தீர்மானிக்கட்டும் உங்கள் போக்கும், உங்கள் வாக்கும்! தமிழ்நாட்டின் வெற்றிக்காக புதியதோர் விதி ஒன்றை புதுமையாகச் செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.