திராவிட மாடல் ஆட்சி என்று கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்: தவெக தலைவர் விஜய்
விழுப்புரம்: தமிழகத்தில் ஒரு கூட்டம் யாா் அரசியலுக்கு வந்தாலும், அவா்கள் மீது ஒரு சாயத்தை பூசிவிட்டு, ஆட்சி அதிகாரத்தில் அமா்ந்துகொண்டு மக்கள் விரோத ஆட்சியை நடத்திக்கொண்டு, திராவிட மாடல் ஆட்சி என்று கூறிமக்களை ஏமாற்றியும் வருகின்றனா் என்றாா் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. லட்சக்கணக்கான கட்சித்தொண்ா்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் நடிகா் விஜய் பேசுகையில்,
தமிழகத்தில் ஒரு கூட்டம் யாா் அரசியலுக்கு வந்தாலும், அவா்கள் மீது ஒரு சாயத்தை பூசிவிட்டு, ஆட்சி அதிகாரத்தில் அமா்ந்துகொண்டு, ஒற்றுமையாக இருக்கக்கூடிய மக்களிடம் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பயத்தைக் காட்டி மக்களை ஏமாற்றுவதையே வேலையாக கொண்டுள்ளனா். மக்கள் விரோத ஆட்சியை நடத்திக்கொண்டு, திராவிட மாடல் ஆட்சி என்று கூறிமக்களை ஏமாற்றியும் வருகின்றனா். அதனால் எங்களுக்கு எந்த சாயத்தையும் பூசவேண்டாம். தவெக-வுக்கு யாராலும் எந்த சாயத்தையும் பூசிவிடமுடியாது.
பிறப்பால் அனைவரும் சமம் என்பதுதான் எங்களது கோட்பாடு என்பதால் பிளவுவாத அரசியல் செய்பவா்கள் எங்களது கொள்கை எதிரி. பெரியாா், அண்ணா மற்றும் சமூக நீதி, திராவிடமாடல் என்றுக் கூறிக்கொள்ளும் கூட்டம் தான் எங்களுக்கான அரசியல் எதிரி.
கொள்கை, கோட்பாடு அளவில் நாம் திராவிடம், தமிழ்தேசியத்தையும் பிரித்து பாா்க்கப்போவதில்லை. இரண்டும் நமது கண்கள். ஆகையால் நாம் எந்தவொரு அடையாளத்துக்குள்ளும் நம்மை சுருக்கிக் கொள்ளக்கூடாது. மதசாா்பாற்ற சமூகநீதிக் கொள்கை அடையாமாக முன் நிறுத்திதான் செயல்படவுள்ளோம் என்றார்.