;
Athirady Tamil News

முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் வெள்ளிவிழா

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் வெள்ளிவிழா நிகழ்வு கடந்த சனிக்கிழமை(26) இடம்பெற்றது.

பீடபதிபதி பேராசிரியர் என்.கெங்காதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்வில் முன்னாள் துணைவேந்தர்கள், பீடாதிபதிகள், பேரவை உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், பழைய மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளிவிழா மலர் வெளியீடும், 25 வருடங்களுக்கு மேல் பல்கலைக்கழகத்தில் சேவையாற்றியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.