காசாவில் அதிகரிக்கும் பதற்றம் : ஐநா அமைப்புக்கு அதிரடியாக தடை விதித்தது இஸ்ரேல்
ஐநாவின் பாலஸ்தீனிய அகதிகள் நிறுவனம் (Unrwa) இஸ்ரேலிலும்(israel) அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் செயற்படுவதைத் தடை செய்யும் இரண்டு சட்டங்களை இஸ்ரேல் பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளதால் காசாவில் இடம்பெயந்துள்ள மக்களுக்கு உதவிகள் சென்று சேர்வது பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளதுடன் அச்சமான சூழலையும் உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா(us), இங்கிலாந்து(england), ஜெர்மனி(germany) உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை குறித்து தீவிர கவலை தெரிவித்துள்ளன.
பல்வேறு நாடுகள் கவலை
வாக்கெடுப்புக்கு முன்னதாக, காசா பகுதியில் மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பதில் ஐநா முகவரமைப்பு “முக்கியமான” பங்கைக் கொண்டிருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் Unrwaவின் உதவி மற்றும் சேவைகளை நம்பியிருக்கிறார்கள். கடந்த7 ஒக்டோபர் 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் இந்த முகவரமைப்பின் உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டதாக கூறி, Unrwa ,ஹமாஸுடன் உடந்தையாக இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.
பாலஸ்தீன மக்களின் துயரத்தை ஆழப்படுத்தும்
Unrwa பல தசாப்தங்களாக காசாவில் உள்ள மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் ஆதரவையும் வழங்கிவருகிறது.
Unrwa வின் பணிப்பாளர் ஜெனரல், பிலிப் லாஸ்ஸரினி(Philippe Lazzarini),இஸ்ரேலின் இந்த முடிவு பாலஸ்தீன மக்களின் துயரத்தை ஆழப்படுத்தும் என்று கூறினார்.
கடந்த ஆண்டு காசாவில் போர் வெடித்ததில் இருந்து, Unrwa வின் இருப்பு, அங்குள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான பொருட்களைப் பெறுவதற்கான முயற்சிகளின் ஒரு முக்கிய பகுதியாக மாறியுள்ளது, அவர்கள் அனைவரும் உயிர்வாழ்வதற்கான உதவியை நம்பியிருக்கிறார்கள்.