;
Athirady Tamil News

மக்களே சூப்பர் நியூஸ்.. வெறும் 199 ரூபாய்க்கு 14 மளிகை பொருட்கள் – மிஸ் பண்ணிடாதீங்க!

0

தமிழக அரசு குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனையை தொடங்கியுள்ளது.

சூப்பர் நியூஸ்..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.

இந்த நிலைநில் மளிகை பொருட்களை குறைவான விலையில் மக்களுக்கு கிடைக்கவும் உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் கூட்டுறவு துறை நடவடிக்கை எடுத்துள்ளது. . முன்னதாக 499 ரூபாய்க்கு 15 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் அமல் படுத்தப்பட்டது.

இம்முறை இதை விட குறைவான விலையில் மக்களுக்கு சமையல் பொருட்கள் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், “கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள்

மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பானது, பிரீமியம் மற்றும் எலைட் என இரண்டு வகையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

199 ரூபாய்க்கு..
இதில் பீரிமியம் எலைட் பிரிவில் 199 மற்றும் 299 என்ற அளவில் விற்பனை செய்யப்படவுள்ளது. அதில், பிரீமியம் (Premium) தொகுப்பில் துவரம்பருப்பு-200கிராம், உளுத்தம்பருப்பு-200கிராம், நீட்டு மிளகாய்-100கிராம்.

தனியா-100கிராம். புளி-100கிராம், ரவை-100கிராம், ஏலக்காய்-5கிராம், கடலைபருப்பு-200கிராம், வறுகடலை (குண்டு) -100கிராம், மிளகு-25கிராம். சீரகம்-25கிராம், வெந்தயம்-50கிராம். கடுகு- 50கிராம், சோம்பு-50கிராம்.

என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு 199 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும், எலைட் (Ellte) தொகுப்பில் துவரம்பருப்பு-250கிராம், உளுத்தம்பருப்பு-250கிராம். கடலைபருப்பு-250கிராம், சோம்பு-50கிராம். நீட்டு மிளகாய்-250கிராம்.

மளிகை
தனியா- 200கிராம், புளி-100கிராம், ரவை-100கிராம், ஏலக்காய்-5கிராம், வறுகடலை (குண்டு)-200கிராம், மிளகு-50கிராம், சீரகம்-50கிராம். வெந்தயம்-50கிராம், கடுகு-50கிராம். என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு 299 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

அது மட்டுமின்றி, தீபாவளி பண்டிகையில் முக்கியத்துவம் பிடிப்பது இனிப்பு வகைகளாகும்,அதற்காகவே சிறப்புத் தொகுப்பு விற்பனையில் “அதிரசம்-முறுக்கு காம்போ” என்ற விற்பனை தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த “அதிரசம்-முறுக்கு காம்போ” தொகுப்பில் பச்சரிசி மாவு- 500கிராம்.

பாகு வெல்லம்-500கிராம், ஏலக்காய்-5கிராம். மைதா மாவு- 500கிராம். Sunland/Goldwinner Sunflower Oil -1/2லிட்டர் என 5 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு 190 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த தீபாவளி சிறப்பு தொகுப்பானது கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் “கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற பெயரில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை 28.10.2024 முதல் நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.