;
Athirady Tamil News

அநீதிகளுக்கு முடிவில்லையா – சசிகலா ரவிராஜ்

0

என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி என்னுயைட வீட்டிற்கு பொறிக்கப்பட்டிருந்த என்னுடைய கணவரின் பெயர் மீது மை பூசி அதனை அழித்து அநியாயம் செய்தவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டு 3 நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் தெரிவித்தார்.

திருநெல்வேலி,மருதனார் மடம் பகுதியில் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தமிழரசுக்கட்சி வேட்பாளரின் ஆதரவாளர் என்று கருதப்படும் பெண் ஒருவரால் என்னுடைய வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீட்டுக் கண்ணாடிகள் நொருங்கின.
அதேவேளை வீட்டு வாசல் தூணில் என்னுடைய கணவர் நடராஜா ரவிராஜ் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

அதன் மீது மை பூசி அழிக்கப்பட்டது. அதேவேளை எமது மதில் சுவர்களில் தமிழரசுக்கட்சி வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்ட போதிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

என்னுடைய கணவர் ஜனநாயக ரீதியில் தேர்தலை எதிர்கொண்டு பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டுக்கொண்டிருந்தபோதே தென்னிலங்கையில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்றுவரை அவருடைய கொலையை மேற்கொண்டவர்களுக்கோ அதற்கு காரணமானவர்களுக்கோ தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

நாட்டில் அநீதிகளுக்கு முடிவில்லையா? என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.