தினமும் காலையில் எலுமிச்சை-இஞ்சி டீ குடிப்பதால் உடலில் குணமாகும் நோய் என்ன?
பொதுவாக எல்லோருக்கும் காலையில் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். காலையில் எழுந்தவுடன் டீ குடிக்கவில்லை என்றால் சிலருக்கு அந்த நாளே மந்தமாக இருக்கும்.
இஞ்சி இயற்கையில் காணப்படும் ஒரு மூலிகையாகும். இது பாரம்பரிய உணவுகளுக்கும் சேர்க்கப்படும் ஒரு பொருளாகும். இஞ்சி டீயுடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் சளி, தலைவலி, இரைப்பை பிரச்சனை, வாந்தி போன்ற பல பிரச்சனைகளில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
இந்த டீயை மற்றைய நேரங்களை விட காலையில் குடிப்பது மிகவும் நன்மை தரும். இதனால் என்னென்ன பயன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
எலுமிச்சை,இஞ்சி டீ
தேவையானவை
புதிய இஞ்சி (சிறு துண்டுகள்) – 4
எலுமிச்சை – 1
சூடான தண்ணீர் – 4 கப்
செய்யும் முறை
இஞ்சி துண்டுகளை அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுடன் துருவிய இஞ்சியைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க விடவும்.
5 நிமிடம் கழித்து இறக்கி ஒரு குவளையில் போட்டு சூடாக குடிக்கவும். இந்த தேநீரை மீண்டும் சூடாக்கி ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறை குடிக்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
காலையில் இந்த டீ அஜீரணம் மற்றும் வாய்வு போன்ற பிரச்சனைகளை விரைவில் குறைக்க உதவுகிறது. இதில் இருக்கும் எலுமிச்சை மற்றும் இஞ்சியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மழைக்காலங்களில் சளி, காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து விடுபடலாம். இந்த டீ உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது. மன அழுத்தத்தில் இந்த டீயை குடிக்கும் போது மன அழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது.
எலுமிச்சை இஞ்சி தேநீர் வீக்கம், கீல்வாதம் மற்றும் தலைவலி ஆகியவற்றுடன் தொடர்புடைய வலியைக் குறைக்க இது உதவும். உடற்பயிற்சி செய்பவர்கள் அவர்களுக்கு உண்டாகும் தசை வலியைப் போக்க எலுமிச்சை-இஞ்சி டீ நிவாரணம் தரும்.
எலுமிச்சை இஞ்சி தேநீர் காலையில் குடித்தால் உடல் புத்துணர்ச்சியாக செயல்படும். எலுமிச்சையில் உள்ள இன்சுலின் உடலில் தேங்கியுள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதால் உடல் எடை குறையும்.
இஞ்சி பசியை அடக்கும். இது உடல் எடையை குறைக்க உதவுகிறதுஎலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இஞ்சி-லெமன் டீ குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இந்த தேநீர் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. இதயத்திற்கும் நல்லது. கல்லீரல் நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.