;
Athirady Tamil News

வேட்பாளர் புஸ்பராசாவின் கல்முனை அலுவலகம் திறந்து வைப்பு(video/photoes)

0
 video link-

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக சங்கு சின்னத்தில் எஇலக்கம் 10 இல் போட்டியிடும் சோ. புஸ்பராஜாவின் தேர்தல் காரியாலயம் செவ்வாய்க்கிழமை(29) மாலை கல்முனை உடையார் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளான ஈ. பி. ஆர் எல். எப் அம்பாறை முக்கியஸ்தர் புண்ணியநாதன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வின் சக வேட்பாளரான கி. லிங்கேஸ்வரன் மற்றும் புளொட் அமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர் சங்கரி ஈரோஸ் ஜனநாயக முண்ணனியின் தலைவர் இராஜ இராஜேந்திரன் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நடராசா ஜீவராசா உட்பட பெருமளவான ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சங்கு சின்னத்தில் எஇலக்கம் 10 இல் போட்டியிடும் சோ. புஸ்பராஜா கல்வியிலாளர்கள்வை புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய போது தாங்கள் மனப்பூர்வமான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்திருந்தனர்.

இதன் போது அங்கு உரையாற்றிய

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கல்வி சமூக பொருளாதார நிலைகளில் உயர்வடைய வேண்டுமாயின் இம் மக்களுக்கான முறையான அரசியல் தலைமைத்துவம் தோற்றம் பெற வேண்டும்.கடந்த காலங்களில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் விட்ட தவறுகள் காரணமாக எமது மக்களின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது இந் நிலையில் இருந்து நாம் மீட்சிபெற வேண்டுமாயின் நாம் அனைவரும் எமது மக்கள் எதிர் கொள்ளும் சகலவிதமான பிரச்சினைகளுக்கும் துணிந்து முகங்கொடுத்து சிறந்த தீர்வினைப் பெற்றுத் தரக்கூடிய ஆளுமைத் திறனும் அரசியல் ஞானமும் தெளிவும் உள்ள ஒருவரை பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது எமது மக்களின் தலையாய கடமையாகும்.

கடந்த பொதுத் தேர்தல் இடம்பெற்ற போது தமிழர்கள் பல அணியினராக பிரிந்ததால் எமது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பறிபோன வரலாறு உண்டு இத்தகைய வரலாற்று தவறை இம்முறை எமது மக்கள் மேற்கொள்ளாமல் எமது மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்று மக்களுக்கு எதுவும் செய்யாத இலங்கைத் தமிழரசுக் கட்சியினரை விரட்டியடிக்க வேண்டும்.

அதே கடந்த காலங்களில் அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் இருந்த வேளையில் அம்பாறை மாவட்ட தமிழர்களைப் பற்றி சிந்திக்காத வீணைச் சின்னக்காரர்களையும் படகுச் சின்னக்காரர்களையும் விரட்டியடிக்க வேண்டும் காரணம் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்காக உலாவரும் சில்லறை வியாபாரிகளே இவர்கள்.போர் மேகம் சூழ்ந்திருந்த காலத்தில் பலரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாவிதன்வெளி பிரதேச சபையை வினைத்திறன் விளைதிறன் மிக்க சபையாக கொண்டு நடாத்தி காட்டியவன் நான்.பின்னர் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் அமோக வாக்குகளைப் பெற்று கிழக்கு மாகாணசபை உறுப்பினராகத் தெரிவாகி எமது மக்களுக்கு சிறந்த சேவையை செய்துள்ளென்.

பின்னர் அரசியலில் இருந்து சிலகாலம் ஒதுங்கியிருந்த நான் பல தமிழ் அரசியல் வாதிகளால் வென்றெடுக்க முடியாமல் போன வட்டமடு மேச்சல் தரை காணிப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்தேன்.இத்தரைக்கு உரித்தான 4800 ஏக்கர் நிலத்தை மீட்கவும் 269 பால் ண்ணையாளர்கள் பயன் பெறவும் 30 ஆயிரம் மாடுகளை பராமரிக்கும் தரையை பெற்றுக் கொடுப்பதற்காக இரண்டு தடவைகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறேன்.

எனவே வாய்ப் பேச்சில் மட்டும் வீரம் காட்டாமல் எனது மக்கள் பணியை தொடர்ந்த மேற்கொள்ள பாராளுமன்றம் அனுப்பி வைக்க எம் மக்கள் முன்வர வேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.