கிளிநொச்சி மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் 3,955 பேர் தபால் மூல வாக்களிப்புக்காக தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கிளிநொச்சியிலும் இன்று (30) சுமுகமான முறையில் இடம் பெற்று வருகின்றது.
இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தபால் மூல வாக்களிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு தபால் மூலமாக வாக்களிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் வாக்களிப்புக்கு தவறியவர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வாக்களிக்க முடியும்.
இதைவிட முப்படையினர் அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் முதலாம் திகதியும் நான்காம் திகதியும் தபால் மூலமான வாக்குகளை செலுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் , எதிர்வரும் நம்பர் மாதம் 7 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் பழைய மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்திலும் வாக்குகளை செலுத்த முடியும் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தெரிவித்துள்ளார்.