11 குழந்தைகளுக்காக ரூ.1000 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய எலன் மஸ்க்
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) தனது 11 குழந்தைகள் மற்றும் அவர்களின் 3 தாய்மார்களை ஒரே வீட்டில் வாழவைக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் 14,400 சதுர அடியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.
அதற்கு அருகில், 6 படுக்கையறைகள் கொண்ட மற்றொரு வீட்டையும் மஸ்க் வாங்கியுள்ளார்.
இந்த இரண்டு சொத்துக்களின் மதிப்பு 35 மில்லியன் டொலர் (இலங்கை பணமதிப்பில் ரூ. 1025 கோடி) ஆகும்.
இந்த பங்களா மஸ்க்கின் டெக்சாஸ் வீட்டிலிருந்து 10 நிமிட தூரத்தில் உள்ளது.
அனைத்து குழந்தைகளும் ஒன்றாக வாழ்ந்தால், அவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று மஸ்க் நம்புகிறார். மேலும், அவர் நினைக்கும் நேரங்களில் அவர்களை எளிதாக சந்திக்க முடியும்.
எலான் மஸ்க்கின் பங்களா டஸ்கன் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மஸ்க்கிற்கு மொத்தம் 12 குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் அவரது முதல் மகன் ஜஸ்டின் மஸ்க் பிறந்த 10 வாரங்களுக்குப் பிறகு இறந்தது.