;
Athirady Tamil News

பிரித்தானியாவில் குறைந்தபட்ச ஊதியம் 6.7 சதவீதம் உயர்வு.!

0

பிரித்தானியாவில் குறைந்தபட்ச ஊதியம் அடுத்த வருடம் 6.7% அதிகரிக்கவுள்ளது. இது பணவீக்கத்தை விட அதிகமான உயர்வாகும்.

இது பிரித்தானிய பொருளாதார அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸுக்கு தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுகின்றனர் என்பதை வலியுறுத்த உதவுகிறது.

ஆனால், இது Bank of England-ன் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு சவாலாக அமையக்கூடும்.

2025 ஏப்ரல் மாதம் முதல், முழுநேர ஊழியர்கள் வருடத்திற்கு £1,400 கூடுதலாக பெறுவார்கள். காரணம், குறைந்தபட்ச ஊதியம் மணிக்கு £11.44 இலிருந்து £12.21-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

18 முதல் 20 வயதுடைய இளைஞர்களின் ஊதியம் £8.60 இருந்து £10 ஆக அதிகரிக்கப்படுகிறது, இது இதுவரையிலான மிகப்பாரிய உயர்வாகும்.

இவ்வளவு பாரிய உயர்வு தொழிலாளர் கட்சியின் அனைத்து வயதினருக்கும் ஒரே மாதிரியான குறைந்தபட்ச ஊதியம் ஏற்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியா

கும். இளைஞர்கள் வருடத்திற்கு £2,500 கூடுதல் வருமானம் பெறுவார்கள்.

பொருளாதார அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் இதை “நிஜமான வாழ்வாதார ஊதியம்” என்று குறிப்பிடுகிறார்.

இது 3 மில்லியன் தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய உதவியாக இருக்கும், ஏனெனில் அனைத்து தொழிலாளர்களும் அதிக வாழ்வாதார செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இந்த உயர்வு நிறுவனங்களுக்கு சேலவினத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதால், பொருளாதார நிபுணர்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த சிரமம் ஏற்படுமென எச்சரிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.