Sarco இயந்திரம் மூலம் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்: சர்ச்சைக்கு நிறுவனம் விளக்கம்
சுவிட்சர்லாந்தில், எளிமையாக, தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம் என அழைக்கப்படும் இயந்திரம் ஒன்றைப் பயன்படுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட பெண் தொடர்பில் திடுக்கிடவைக்கும் தகவல் ஒன்று வெளியானது.
எளிமையாக உயிரை மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம்
The Last Resort என்னும் நிறுவனம், நீண்ட கால மற்றும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோர், தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
அதற்கு சார்க்கோ (Sarco) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் Schaffhausen மாகாணத்தில், 64 வயது அமெரிக்கப் பெண்ணொருவர் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
திடுக்கிடவைக்கும் தகவல்
இந்நிலையில், உயிரை மாய்த்துக்கொண்ட அந்த அமெரிக்கப்பெண் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
அந்தப் பெண்ணின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்த தடயவியல் சிகிச்சை நிபுணர், அந்தப் பெண்ணின் கழுத்தில் காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண் உயிரை மாய்த்துக்கொள்ளும்போது அவருடன் இருந்தவர் அந்த இயந்திரத்தை உருவாக்கிய நிறுவனத்தின் துணை தலைவரான Florian Willet மட்டுமே.
அவர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அமெரிக்கப்பெண் கழுத்து நெறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என தடயவியல் சிகிச்சை நிபுணர் கூறியுள்ளதைத் தொடர்ந்து வழக்கு சூடு பிடித்துள்ளது.
சர்ச்சைக்கு நிறுவனம் விளக்கம்
ஆனால், அந்த அமெரிக்கப்பெண் கொல்லப்பட்டதாக கூறப்படும் விடயம் அபத்தமானது என சார்க்கோ இயந்திரத்தை உருவாக்கிய The Last Resort நிறுவனம் கூறியுள்ளது.
அவர் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டதற்கு ஆதாரமாக உடற்கூறு ஆய்வு முடிவுகள் எதுவும் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை என்றும் அவை மறைக்கப்பட்டுள்ளதாகவும் Dr Willet தெரிவித்துள்ளார்.
சார்க்கோ இயந்திரத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கமெராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், அந்தப் பெண் தானாகவே உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்ததையும், சார்க்கோ இயந்திரம் ஒழுங்காக வேலை செய்து, அவர் அமைதியான முறையில் உயிரிழந்ததையும் காட்டும் காட்சிகள் தங்களிடம் இருப்பதாகவும் The Last Resort நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், தான் அந்தப் பெண்ணிடம், ’நீங்கள் தயாரா’ என கேட்டதாகவும், அவர் ’தயார்’ என கூறியதாகவும், அதுதான் அவர் கூறிய இறுதி வார்த்தைகள் என்றும் Dr Willet தெரிவித்துள்ளார்.