தீபாவளி : ஆவினில் ரூ.115 கோடிக்கு விற்பனை
தீபாவளியை முன்னிட்டு ஆவின் விற்பனை நிலையங்களில் ரூ.115 கோடிக்கு இனிப்பு, கார வகைகள் விற்பனையாகியுள்ளன.
ஆவின் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு பல்வேறு வகையான சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் ஆவின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தனியாா் தொழில் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை அணுகி தேவையான இனிப்பு வகைகள் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது வரை சுமாா் ரூ.115 கோடி ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.