தீபாவளியை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகள்..!

தீபாவளி தினத்தினை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அந்த வகையில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதன் போது நூறுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து நல்லூர் கந்தனை தரிசித்து சென்றனர்