நாட்டு மக்களுக்கு பிரதமர் ஹரிணி விடுத்த தீபாவளி வாழ்த்து
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/10/Screenshot-2024-10-31-113151-658x430.jpg)
தீபாவளியின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிர வைக்கட்டும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அனைவரும் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உரித்தை அனுபவிக்கக் கூடிய ஓர் உலகைக் கட்டியெழுப்ப நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் கூறியுள்ளார்.