;
Athirady Tamil News

தட்டம்மை தடுப்பூசி திட்டம் : சுகாதார அமைச்சு நடவடிக்கை

0

இலங்கையில் (Sri Lanka) தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு (Ministry of Health) நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு முன்னர் தட்டம்மை தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத மற்றும் ஒரு டோஸ் மாத்திரம் பெற்றுக்கொண்டோருக்காக நவம்பர் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை தடுப்பூசி திட்டம் செயற்படுத்தப்படும்.

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிறுவகத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் ஹசித திசேரா (Hasitha Tissera) தெரிவித்துள்ளார்.

தட்டம்மை தடுப்பூசி

இலங்கை தட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடானாலும், 2023 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சில பகுதிகளில் அம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாக சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

9 மாதத்தில் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்படுவதுடன், அதற்கு முன்னரே அக்குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் ஏற்படுவதற்கான அதிக அபாயம் காணப்படுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இதற்கு முன்னர் தட்டம்மை தடுப்பூசியைப் பெறாதவர்கள் மற்றும் ஒரு டோஸ் மட்டுமே பெற்றவர்களும் ஆபத்தில் இருப்பதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.