ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் புதிய நாணயத்தாள்கள்
எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் வெளிவரலாம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்றையதினம் (31) கலந்துக் கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயன்படுத்த முடியாத பழைய நாணயத்தாள்களுக்கு பதிலாக புதிய நாணயத்தாள்களை மத்திய வங்கி அச்சிடுவதாகவும், இவ்வாறு அச்சிடப்படுபவை தற்போதைய ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள்
அத்தோடு, இது ஒரு சாதாரண செயற்பாடு என்றும் பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மில்லியன் கணக்கிலான பணத்தை புதிய அரசாங்கம் ஏற்கனவே அச்சிட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டுக்களை புதிய அரசாங்கம் உட்பட மத்திய வங்கியும் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.