தற்காலிகமாகவே ஹிஸ்புல்லா புதிய தலைவர்…! மிரட்டும் இஸ்ரேல்
ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவரான நைம் காசிமிற்கு (Naim Qassem) இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோசவ் கல்லன்ட் கடும் தொனியில் எச்சரித்துள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கொல்லப்பட்டார். இதையடுத்து ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைவர் தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் சில ட்வீட்களை பதிவிட்டுள்ளார். அதில் “இந்த நியமனம் தற்காலிகமானது. கவுண்டவுன் தொடங்கி விட்டது” என்று எச்சரித்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்காக நாங்கள் கெஞ்ச மாட்டோம்
இஸ்ரேல் போர் நிறுத்தத்தைக் கொண்டு வரும் என்றே பலரும் எதிர்பார்த்த நிலையில், ஹிஸ்புல்லா தலைவரை எச்சரிக்கும் வகையில் இஸ்ரேல் பதிவிட்டுள்ள இந்த ட்வீட் சர்ச்சையாகியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் (Israel) போரை நிறுத்த முடிவு செய்தால், நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம் என ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் புதிய தலைவர் நைம் காசிம் (Naim Qassem) தெரிவித்துள்ளார்.
எங்கள் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லாவின் (Hassan Nasrallah) பணித் திட்டத்தின் தொடர்ச்சியே எனது வேலையும். அவர் உருவாக்கிய போர்த் திட்டத்தை முன்னெடுப்பதில் உறுதியாக இருக்கிறேன். இஸ்ரேல் போரை நிறுத்த முடிவு செய்தால், நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் நாங்கள் சொல்லும் நிபந்தனைகளின்படி நடந்தால் மட்டும் தான். போர் நிறுத்தத்திற்காக நாங்கள் கெஞ்ச மாட்டோம்” என நைல் காசிம் தெரிவித்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.