பெர்லின் ரயில் நிலையத்தில் வெடிப்பொருட்கள்: மர்ம நபரை வலைவீசித் தேடும் பொலிசார்
ஜேர்மன் தலைநகர் பெர்லினிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெர்லினிலுள்ள Neukölln ரயில் நிலையத்தில் நேற்று மாலை வெடிப்பொருட்கள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அது தொடர்பில் பொலிசார் சோதனையிட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், சம்பவ இடத்திலிருந்து, அந்தப் பையை வைத்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ஓட்டம் பிடித்துள்ளார்.
அந்த வெடிப்பொருட்கள், பாதுகாப்பான இடம் ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.
அவை மக்கள் நடமாடும் இடத்தில் வெடித்திருந்தால் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என கூறியுள்ள அதிகாரிகள், அவ்வகையில், பெரும் அசம்பாவிதம் ஒன்று தவிர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், அந்த வெடிப்பொருட்கள், பொதுமக்கள் நடமாடும் இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்கள் என ஜேர்மன் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.