;
Athirady Tamil News

ஹான்ஸ் விஜயசூரியவுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பதவி நியமனம்

0

ஆக்சியாட்டா (Axiata) குழுமத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹான்ஸ் விஜயசூரிய, (Hans Wijayasuriya) டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம், இன்று (01.11.2024) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayaka) இருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

டிஜிட்டல் பொருளாதாரம்
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் மாற்றத்தில் குறிப்பிடத்தக்க முதல் படியாக இந்த நியமனம் அமைவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தீர்வுகளில் அனுபவம் வாய்ந்த விஜயசூரிய, பல்வேறு துறைகளில் டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்தும், இணைப்பை மேம்படுத்தும் மற்றும் பொருளாதார நவீனமயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளை முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.