மஹிந்தவின் விசேட உயரடுக்கு பாதுகாப்பு குறைப்பு; அனுர அரசின் அதிரடி!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி 60 அதிகாரிகள், இரண்டு ஜீப்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு முச்சக்கரவண்டி என்பன பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளன.
உயரடுக்கு நியமனக் குழு தீர்மானம்
உயரடுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமனக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையின் பிரகாரம் விசேட பாதுகாப்புப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் சிபாரிசுகளுடன் இது தொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின்படி, நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பட்டியலை, நாளை (நவம்பர் 02)க்கு முன், அந்த பிரிவுக்கு பொறுப்பான டி.ஐ.ஜி.,யிடம் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் , உபரி வாகனங்களை, மறுநாளுக்கு (நவம்பர் 03) முன்,, போலீஸ் போக்குவரத்து பிரிவில் ஒப்படைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.