;
Athirady Tamil News

பிரதமர் ஹரினி மற்றும் ஐ. நா சனத்தொகை நிதிய இலங்கைக்கான பிரதிநிதி இடையே விசேட சந்திப்பு..!

0

ஐக்கிய நாடுகளின் (UN) சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi நேற்றைய தினம் (01) பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கை அரசியல் களத்தில் அதிகரிக்கும் மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பில் Adeniyi தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

ஆண் பெண் சமத்துவம் மற்றும் மகளிரை பலப்படுத்துவதற்கென நாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் UNFPA அமைப்பின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிசெய்தார்.

பொருளாதார செயற்பாடுகள்

இந்த கூட்டத்தில் பிரதமர் ஆண் பெண் சமத்துவம், மகளிரின் பொருளாதார செயற்பாடுகள், ஆண் பெண் சமூகத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட வன்முறை கையாள்கை மற்றும் இலங்கையில் மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளின் போஷாக்கை அதிகரிப்பதற்கான தீர்மானம் மிக்க பணிகள் குறித்தும் அவதானம் செலுத்தினார்.

கல்வி தொடர்பில் பெண்களின் பங்களிப்பு மகிழ்ச்சியான மட்டத்தில் காணப்படுவதுடன், தீர்மானம் எடுக்கும் களத்தில் அவர்களின் தலையீட்டை அதிகரிப்பதில் கூடுதல் அவசியம் காணப்படுவதாகவும் பிரதமர் ஹரினி இதன்போது சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, இலங்கைக்கான UNFPA அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி கூட்டாண்மை மற்றும் ஆலோசனை பகுப்பாய்வாளர் அனுஷிகா அமரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.