பிரான்ஸிலுள்ள சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்
பிரான்ஸிலுள்ள வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் குளிர்காலத்துக்கு ஏற்ற டயர்களை பயன்படுத்துவது கட்டாயமானது என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸில் அதிக அளவில் பனிப்பொழிவைச் சந்திக்கும் 34 மாவட்டங்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சாரதிகளுக்கான அறிவுறுத்தல்
அதன்படி, நவம்பர் 1 ஆம் திகதி முதல் 2025 மார்ச் 31 ஆம் திகதி வரை இந்த மாற்றம் நடைமுறையில் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குளிர்காலத்துக்கு ஏற்ற இலகுவில் வழுக்காத டயர்களை வாகனங்களில் பயன்படுத்த வேண்டும் அல்லது, அனைத்து பருவகாலத்துக்கும் ஏற்ற டயர்களை பயன்படுத்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், M+S எனப்படும் சகதி மற்றும் பனியினை எதிர்கொள்ளும் திறன்கொண்ட டயர்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கவேண்டும் எனவும், பிற மாவட்டங்களில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பயணிப்பவர்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.