;
Athirady Tamil News

மாவை சேனாதிராஜாவினால் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் பதில் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது

0

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினால் கட்சியின் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் பதில் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று நடைபெற்ற தமிழ் அரசுக் கட்சியின் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்விற்கு சுகயீனம் காரணமாக வர முடியாததால், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்குமாறு பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கத்திடம் விஞ்ஞாபனத்தைக் கையளித்தார்.

தமிழரசுக் கட்சியின் யாழ்-கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களான, சிவஞானம் சிறீதரன், மதியாபாரணம் ஆபிரகாம் சுமந்திரன், இம்மானுவேல் ஆனோல்ட் ஆகியோர் உடனிருந்தார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.