;
Athirady Tamil News

தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட திருமண அழைப்பிதழ் – எவ்வளவு தெரியுமா?

0

தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட காஸ்ட்லி திருமண அழைப்பிதழ் ஒன்று வைரலாகி வருகிறது.

திருமண அழைப்பிதழ்
உத்தரப் பிரதேசம், ஃபிரோசாபாத்தில் தங்க நகை வியாபாரி ஒருவர் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட திருமண அட்டைகளை வடிவமைத்துள்ளார்.

லாலா ரவீந்திர நாத் கன்ஹையா லால் சரஃபா கடையில் தான் இந்த காஸ்ட்லியான அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. லக்கி ஜிண்டால் என்பவர் தான் இந்த கடையின் உரிமையாளர்.

இந்த அழைப்பிதழில் எழுத்துக்கள் தங்கம் அல்லது வெள்ளியால் நேர்த்தியாக பொறிக்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.10,000 முதல் ரூ.11 லட்சம் வரை இருக்கும். இதுகுறித்து பேசிய அவர், பொதுவாக திருமண அழைப்பிதழ்கள் திருமணம் முடிந்தவுடன் தூக்கி வீசப்படுவது உண்டு.

வைரல் போட்டோ

இதனால் அது வீணாகிறது.அழைப்பிதழ்கள் தூக்கி எறியப்படுவதற்குப் பதிலாக நினைவுச் சின்னங்களாகப் போற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது,திருமண சீசன் நெருங்கி வருவதால், வாடிக்கையாளர்கள் இந்த ஆடம்பரமான அழைப்பிதழ்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த அழைப்பிதழ் புகைப்படம் தற்போது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.