;
Athirady Tamil News

ஆளுநர் பதவி அகற்றம் – தவெக கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

0

ஆளுநர் பதவி அகற்ற வலியுறுத்தப்படும் உள்ளிட்ட 28 தீர்மானங்கள் தவெக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அண்மையில் நடைபெற்றது. அதில், கொள்கை திருவிழா என்னும் பெயரில் முக்கிய அறிவிப்புகளை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், பயணத்திட்டங்களை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தவெக செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அதில் மாநில உரிமை தொடர்பாக மாநிலத் தன்னாட்சி உரிமைக் கொள்கைப்படி மருத்துவம் போலவே கல்வியும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட அழுத்தம் கொடுக்கப்படும்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்குப் புறம்பாக நீடிப்பதால், ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. மாநில அரசுகளின் சுயமரியாதையைச் சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.