;
Athirady Tamil News

13 வயது வளர்ப்பு மகள்களை தந்தையே திருமணம் செய்ய அனுமதி : எங்கு தெரியுமா…!

0

தான் தத்தெடுத்து வளர்த்த அல்லது மனைவியின் முதல் கணவர் மூலம் பிறந்த பெண் பிள்ளைகள் 13 வயதை அடைந்ததும் தந்தையே திருமணம் செய்யலாம் எனும் சர்ச்சைக்குரிய சட்டத்தை ஈரான்(iran) அரசு நாடாளுமன்றில் நிறைவேற்றியுள்ளது.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்ற பெயரில் கடந்த வருட இறுதியில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் இந்த சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

ஈரான் புரட்சிக்கு பின்னர் அனைத்தும் தலைகீழாக மாறின
இதுகுறித்து ஈரானை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஈரானில் மன்னராட்சி நடைபெற்றபோது பெண்களின் திருமண வயது 18 ஆக இருந்தது. விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளைப் பெண்கள் பெற்றிருந்தனர்.

ஆனால் கடந்த 1979-ல் நடைபெற்ற ஈரான் புரட்சிக்குப் பின்னர் அனைத்தும் தலைகீழாக மாறின. பெண்களின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டன. தற்போது பெண்களின் திருமண வயது 13 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. அதையும் குறைத்து 9 வயதாக மாற்ற தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்களின் திருமண வயது 15 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது

கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி 13 வயது வளர்ப்பு மகளை, தந்தையே திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஈரான் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இளமையான ஈரானை உருவாக்க தொடர்ச்சியாக பிள்ளை பெறவேண்டும்
இதேவேளை இளமையான ஈரானை உருவாக்க 15 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்கள், தொடர்ச்சியாக குழந்தை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஈரான் சுகாதாரத் துறை துணை அமைச்சர் அலிரேசா ரைசி பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரானில் ஓராண்டு காலத்தில் மட்டும் 15 வயதுக்கு குறைவான சுமார் 1.84 லட்சம் சிறுமிகளுக்கு திருமணம் நடக்கிறது. அந்த நாட்டில் 10 வயதுக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான சிறுமிகளுக்கும் திருமணம் நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.