;
Athirady Tamil News

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் செவ்வாய்க்கிழமை நடத்தப்படுவது ஏன்..! காரணம் தெரியுமா..!

0

உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.

வேட்பாளராக ஜனநாய கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும் (Kamala Harris), குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பும் (Donald Trump) களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பு மிக்க அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் செவ்வாய்க்கிழமை மட்டுமே நடைபெறுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

1845-ல் அமெரிக்க காங்கிரஸ், நவம்பரில் முதல் திங்கட்கிழமைக்குப் பின்வரும் முதல் செவ்வாய் நாளைத் தேர்தல் நாளாக அறிவித்ததிலிருந்து கடந்த 170 ஆண்டுகளாக, அமெரிக்காவில் தேர்தல்கள் தொடர்ந்து செவ்வாய் நாளில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தத் தீர்மானம் கடந்த 170 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இதற்கு முன்பு, ஒவ்வொரு அமெரிக்க மாகாணமும் தனிப்பட்ட முறையில் வாக்களிக்கும் நாளைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு ஒவ்வொரு மாகாணமும் டிசம்பர் முதல் புதன்கிழமை வரை 34 நாள் இடைவெளியில் தங்கள் பங்கிற்கு ஏற்றபடி வாக்களிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த முறையால், வாக்களிப்பு நாட்கள் மாகாணத்தின் நிலையைப் பொறுத்து வேறுபட்டது.

செவ்வாய்கிழமை

எனவே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை நவம்பர் முதல் செவ்வாய்க்கிழமையாக நிர்ணயிக்க பல காரணங்கள் இருந்தன.

1840-களில், தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததால் பழைய முறை சரியாக இருந்தது.

ஆனால் போக்குவரத்து வசதிகள், தொடருந்து, தந்தி போன்ற வசதிகள் மேம்பட, பொதுமக்களின் கருத்துக்கள் மாற்றியமைத்து தேர்தல் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தால் அமெரிக்கா தேர்தல் திகதி ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது.

நவம்பர் மாதம் அறுவடை முடிந்திருக்கும் காலம் என்பதால் விவசாயிகள் வாக்களிக்க வசதியாக இருக்கும் என கருதப்பட்டது.

மேலும், அந்நாட்களில் மிகுந்த வெப்பம் அல்லது குளிர் இருப்பதில்லை என்பதால் பருவநிலை வாக்களிப்பதற்குச் சாதகமாக இருக்கும். முதலில், வார இறுதி நாட்களில் வாக்களிப்பது குறித்து யோசிக்கப்பட்டது, ஆனால், ஞாயிறு காலை தேவாலயம் செல்வது மற்றும் திங்கட்கிழமை பயணம் போன்ற காரணங்களால் செவ்வாய்க் கிழமையைத் தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்டது.

மரபுக்கு எதிர்ப்பு

தற்போது, செவ்வாய் கிழமையில் தேர்தல் நடத்துவதற்கான மரபுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

வேலை நாட்களில் வாக்களிப்பதால், குறிப்பாக இளைய வாக்காளர்கள் தங்கள் வேலைப்பளுவில் இருந்து விடுபட்டு வாக்களிக்கச் சிரமப்படுகிறார்கள் என்று பலர் குற்றம் சொல்கின்றனர்.

இது, தேர்தல்களில் அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பங்கேற்கும் வகையில் தேர்தல் திகதியை மாற்ற வேண்டிய நிலையைப் பற்றிய விவாத பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.