கம்பஹா மாவட்ட மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
கம்பஹாவில் உள்ள சில பகுதிகளுக்கு 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளையதினம் (05-11-2024) மாலை 6.00 மணி முதல் நாளை மறுதினம் (06-11-2024) காலை 6.00 மணி வரை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை நகரசபை பகுதிகள், கட்டான மற்றும் மினுவாங்கொடை பிரதேச சபை பகுதிகள் மற்றும் ஜா-எல மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஒரு பகுதிக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படும்.
மேலும், நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.