யார் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி…! உலகே திரும்பிப் பார்க்கும் தேர்தல் களம்
அமெரிக்காவில் (USA) இன்று (5.11.2024) ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கின்றது.
இந்தத் தோ்தலில் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் (Kamala Harris) ஜனநாயகக் கட்சி சாா்பிலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சாா்பிலும் போட்டியிடுகின்றனா்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இந்த 7 மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
கருத்துக் கணிப்பு முடிவுகள்
தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் டிரம்ப்பை கமலா ஹரிஸ் சிறிய வித்தியாசத்தில் முந்திவந்தாா். இருந்தாலும், கடைசி நேரத்தில் இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் கடுமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அட்லஸ் இன்டெல் போல் சார்பில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 49 சதவீத ஆதரவுடன் டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கமலா ஹாரிசுக்கு 47.2 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் 1.8 சதவீத வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.
இதேபோல் ராய்ட்டர்ஸ் / இப்சோஸ் கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் ஒரு சதவீத வித்தியாசத்தில் டிரம்பை முந்தினார். கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவும், டிரம்ப் 43 சதவீத ஆதரவும் பெற்றனர்.
அதேசமயம் முந்தைய கருத்துக் கணிப்புகளில் இருந்ததைவிட கமலா ஹாரிசின் ஆதரவு குறைந்துள்ளது. தேர்தல் நாளில் இந்த முடிவில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.