;
Athirady Tamil News

கனடா – ரொறன்ரோவில் வாகனத் தரிப்பு கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

கனடாவின் (Canada) ரொறன்ரோவில் (Toronto) வாகன தரிப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த யோசனையை ரொறன்ரோ வாகன தரிப்பிட அதிகார சபை (Vehicle Parking Authority) முன்வைத்துள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் ஆண்டில் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன தரிப்பு கட்டணங்கள்
இதனடிப்படையில், சுமார் 25 வீதத்தினால் வாகன தரிப்பு கட்டணங்களை அதிகரிக்க யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போது வீதிகளில் வாகனம் ஒன்றை தரித்து நிறுத்துவதற்காக மணித்தியாலம் ஒன்றிற்கு 1.5 முதல் 6.5 டொலர்கள் வரையில் அறவீடு செய்யப்படுகின்றது.

இந்த புதிய கட்டண அதிகரிப்பு அறிமுகம் செய்யப்பட்டால், வாகன தரிப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பணவீக்கம் மற்றும் ஏனைய வட அமெரிக்கா நகரங்களில் காணப்படும் கட்டண அதிகரிப்பு போன்ற காரணிகளை கருதிக் கொண்டு இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.