அமெரிக்கா நோக்கி பறக்கும் விமானங்களை தீப்பிடிக்கச்செய்ய ரஷ்யா சதித்திட்டம்
அமெரிக்கா நோக்கி பறக்கும் விமானங்களில் தீப்பிடிக்கும் சாதனங்களை அனுப்ப ரஷ்யா சதித்திட்டம் திட்டியதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு பறக்கும் சரக்கு அல்லது பயணிகள் விமானங்களில் தீப்பற்ற வைத்தல் மூலம் சேதமடையச் செய்ய ரஷ்யா சதித் திட்டமிட்டதாக மேற்கத்திய பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஜூலை மாதத்தில் ஜேர்மனியிலுள்ள Leipzig மற்றும் இங்கிலாந்தின் Birmingham-ல் DHL லாஜிஸ்டிக்ஸ் மையங்களில் இரு தீப்பிடிக்கும் சாதனங்கள் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, பல நாடுகளின் அதிகாரிகள் குற்றவாளிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தீப்பிடிக்கும் சாதனங்கள், மேக்னீசியத்தை அடிப்படையாகக் கொண்ட எரியூட்டக்கூடிய பொருள் கொண்ட மின்சாதன மசாஜர்கள் மூலம் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் பின்னணியில் ரஷ்யா இருந்ததாகவும், குறிப்பாக ரஷ்யாவின் GRU இராணுவ உளவுத்துறை எஜென்ஸி தொடர்புடையதாகவும் அறியப்பட்டுள்ளது.
போலந்து, ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த வழக்கில் மறு விசாரணைகளை மேற்கொண்டு, நால்வரை கைது செய்துள்ளன.
ரஷ்ய உளவுத்துறை அமைப்புகள் தற்போது மேற்கத்திய நாடுகளில் பல்வேறு நாசவேலை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.