;
Athirady Tamil News

2025 ல் ஆரம்பமாகும் உலகின் முடிவு! அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு

0

பல்கேரிய நாட்டவரான பாபா வாங்காவின் கணிப்புகள் பல நிகழ்ந்துள்ள நிலையில் தற்போது அவரின் எதிர்காலம் குறித்த சில கணிப்புகள் வெளியாகியுள்ளன.

கொரோனா போன்று மிகப்பெரிய தொற்றுநோய் ஒன்று சைபீரியாவில் தோன்றும் எனவும், வெப்பநிலை வீழ்ச்சியால் இந்தியாவில் பஞ்சம் ஏற்படும் எனவும்.இதனால் வெட்டுக்கிளி கூட்டம் உள்ளே புகுந்து நாசத்தை ஏற்படுத்தும்.

இரட்டைக் கோபுர தாக்குதல், சுனாமி, ரஷ்ய ஜனாதிபதி புடின் மீதான தாக்குதல், என இவர் கணித்த பல கணிப்புகள் நடந்துள்ளது.

பாபா வங்காவின் கணிப்புகள்
இதனால் இவரின் கணிப்புகள் மீது உலகின் கவனம் எப்போதும் உள்ளது. அந்தவகையில் உலகத்தின் முடிவை ஏற்படுத்தும் பல நிகழ்வுகள் 2025ஆம் ஆண்டில் ஆரம்பமாகும் என அவர் கணித்துள்ளார்.

தொடர்ச்சியான பேரழிவுகள் மற்றும் மோதல்கள் மனித வரலாற்றையே மாற்றிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகின் முடிவு 2025இல் துவங்கினாலும், மனித இனம் 5079 வரை முற்றிலுமாக அழியாது.

அதாவது பிரச்சினைகளும் சவால்களும் எழுந்தாலும், சில மனித நாகரீகங்கள் பல நூற்றாண்டுகளுக்கு நீடிக்கும்.

உலக அழிவு
2043ஆம் ஆண்டு வாக்கில், ஐரோப்பாவில் ஒரு பெரிய போர் உருவாகும் என பாபா கணித்துள்ளதால், ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு குழப்பங்களும் கருத்து வேறுபாடுகளும் பெரிய போருக்கு வழிவகுக்கலாம் என கருதப்படுகிறது.

2043ஆம் ஆண்டு வாக்கில், ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்துவிடும்.

2076ஆம் ஆண்டுவாக்கில், உலகில் மீண்டும் கம்யூனிச ஆட்சி உருவாகும் . இறுதியாக, 5079ஆம் ஆண்டில், இயற்கைப் பேரழிவு ஒன்றின் காரணமாக உலகம் அழிந்துவிடும்.

அந்த அழிவு மனிதனால் உருவாக்கப்படும் ஒன்றாக இருக்காது, அது இயற்கை நிகழ்வொன்றால் ஏற்படும் என்றும், மனித இனமே அழிந்துபோகும் 2025 இல் ஏலியன் சந்திப்புகளை உலகும் காணும், என்று பாபா வங்கா கணித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.