பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை: அமைச்சரவை அனுமதி
2025 ஆம் ஆண்டுக்கான சீன அரசால் நன்கொடையாக வழங்கப்படுகின்ற பாடசாலை சீருடைத் துணி, பாடசாலை மற்றும் பிரிவினாக்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு விநியோகித்தலுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைச் சீருடைத் துணியின் மொத்தத் தேவை 11.82 மில்லியன் மீற்றர்களாகும்.
அமைச்சரவை
குறித்த முழுத் தொகையை நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசு உடன்பாட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
குறித்த துணித் தொகைக்குரியவாறு கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள மாதிரிகளுக்கமைய, இலங்கை நெசவு மற்றும் ஆடைக் கைத்தொழில் நிறுவகத்தின் மூலமாக பரிசீலிக்கப்பட்ட பின்னர், குறித்த சீருடைத் துணிகள் பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டுக்கு பொருத்தமானதென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவினாக்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சீருடைத் துணியை விநியோகிப்பதற்கான சீன அரசின் நன்கொடையைப் பொறுப்பேற்பதற்காக கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.