;
Athirady Tamil News

பிரதமர் அலுவலகத்திலிருந்த மருத்துவ பிரிவு கலைப்பு

0

பிரதமர் அலுவலகத்திற்காக நிறுவப்பட்ட மருத்துவப் பிரிவு நேற்று (5) கலைக்கப்பட்டது

அலுவலகத்தில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார உபகரணங்கள், ஒளடதங்கள், இரண்டு அம்பியூலன்ஸ் வண்டிகள் என்பவற்றை மீண்டும் சுகாதார அமைச்சிற்கு கையளிக்கும் நிகழ்வு பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி(Pradeep Saputantri) தலைமையில் இன்று(06) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபாலவிடம்(Palitha Mahipala) அதற்கான ஆவணங்கள் மற்றும் திறப்புகளை இதன்போது கையளித்தார்.

செலவுகளை குறைப்பதற்கான அரசின் தீர்மானம்

அத்தியாவசியமற்ற செலவுகளை குறைப்பதற்கு அரசு எடுத்துள்ள கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கமைய இந்த பிரிவிடம் காணப்பட்ட மனிதவள மற்றும் பௌதீக வளங்கள் சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவை பொதுமக்களின் சுகாதார தேவைகளுக்கென பயன்படுத்தப்படவுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.