;
Athirady Tamil News

அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ள டொனால்ட் ட்ரம்பின் வழக்குகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

0

அமெரிக்காவின் (USA) ஜனாதிபதியாக டொனால்டட ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், பதவியேற்கும் முன்னர் அவர் மீதான இரு முக்கியமான வழக்குகள் கைவிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) வெற்றிப்பெற்றுள்ளார்.

இந்த நிலையில் சிறப்பு அரசு சட்டத்தரணி ஜாக் ஸ்மித் முன்னெடுத்த ட்ரம்புக்கு எதிரான இரு முக்கியமான வழக்குகளை கைவிட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

டொனால்டு ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களில் ஜாக் ஸ்மித் (Jack-smith) குறித்த தகவலை தெரிவித்துள்ளமை பேசுபொருளாகியுள்ளது.

அதாவது, ஜனவரி 6ம் திகதி கலவரத்தை மூட்டிய விவகாரம் மற்றும் அரசாங்க ரகசிய ஆவணங்கள் தொடர்பிலான வழக்கு ஆகிய இரண்டும் கைவிட நீதித்துறையுடன் ஆலோசித்து வருவதாக ஜாக் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவால், அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பில் இருக்கும் ஒருவர் நீதி விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த முடிவானது ஜாக் ஸ்மித்துக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஜாக் ஸ்மித் வழக்கு

ஏனேனில் மூன்று ஆண்டுகள் முன்னெடுத்த போராட்டம், மக்கள் வரிப்பணத்தில் சுமார் 35 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது, இருப்பினும் ஜாக் ஸ்மித் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

ஆனால் நியூயோர்க்கில் நிதி முறைகேடு வழக்கில் அடுத்த மாதம் ட்ரம்ப் விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார். மேலும், வோஷிங்டனில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் டிரம்ப் நான்கு வழக்குகளை எதிர்கொள்கிறார்.

தேர்தலில் மோசடி செய்ததாக பொய்யான தகவல்களை பரப்பியதாக ட்ரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜாக் ஸ்மித்தின் பதவி

2021ல் ஜனாதிபதி பொறுப்பில் இருந்து விலகியுள்ள நிலையில், புளோரிடாவில் உள்ள ட்ரம்பின் குடியிருப்பில் இருந்து அரசாங்க ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கும் விசாரணையில் உள்ளது.

ஆனால், ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்த அடுத்த நொடி அரசு சட்டத்தரணியான ஜாக் ஸ்மித்தின் பதவியை பறிப்பேன் என ட்ரம்ப் ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தார்.

ஜாக் ஸ்மித் பதவி பறிக்கப்பட்டால், அவர் தொடர்ந்த வழக்குகளும் கைவிடப்படும் என்றே கூறப்படுகிறது. எனவே, இந்த விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.