Viral Video: சிறிய நாரையிடம் தானாக வந்து சிக்கிய மீன்கள்… எப்படியொரு அதிர்ஷ்டம்னு பாருங்க
நாரை வகையைச் சேர்ந்த Egret பறவை ஒன்று தானாக வந்து சிக்கிய மீனை மிகவும் லாவகமாக தனக்கு உணவாக்கியுள்ள காட்சி பிரமிக்க வைத்துள்ளது.
கஷ்டப்படாமல் கிடைத்த மீன்
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு சிறிய Egret பறவை ஒன்று சிறிது நேரம் நீருக்குள் உணவிற்காக காத்திருக்கின்றது. எதுவும் கிடைக்காத தருணத்தில் எழுந்து பறக்க முற்படுகின்றது.
அத்தருணத்தில் சின்ன சின்ன மீன்கள் தண்ணீருக்கு மேல் துள்ளி குதித்த நிலையில், அதில் லாவகமாக ஒரு மீனை தனக்கு உணவாக்கிக் கொண்டுள்ளது.
குறித்த காட்சியானது பார்வையாளர்களுக்கு வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது. சில தருணங்களில் பறவைகளுக்கு இப்படி கஷ்டப்படாமல் சில உணவுகளும் கிடைக்கத் தான் செய்கின்றது.