;
Athirady Tamil News

ட்ரம்பின் வெற்றி… இளவரசர் ஹரி – மேகன் தம்பதியின் புதிய திட்டம் இதுதான்

0

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்டு ட்ரம்ப் தெரிவாகியுள்ள நிலையில், கலிபோர்னியாவில் குடியிருக்கும் ஹரி – மேகன் தம்பதிக்கு சிக்கல் இறுகியுள்ளது.

குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர்

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வரவிருக்கிறார். இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில் 277 ஆசனங்களைக் கைப்பற்றி டொனால்டு ட்ரம்ப் வெற்றிவாகை சூடியுள்ளார்.

அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் முதல் முறையாக ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இந்த நிலையில், மறைந்த பிரித்தானிய ராணியார் மீது மிகுந்த மரியாதை கொண்ட,

ஆனால் இளவரசர் ஹரியின் நடவடிக்கைகளை விரும்பாத டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரவிருப்பது ஹரி – மேகன் தம்பதிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.

தாம் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டால், இளவரசர் ஹரி போதை மருந்து உட்கொண்டது தொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே டொனால்டு ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஒரே ஒரு காரணத்தாலையே, இளவரசர் ஹரியை அமெரிக்காவில் இருந்து ட்ரம்ப் வெளியேற்றுவார் என்றும் கூறப்படுகிறது. இளவரசர் ஹரியின் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நினைவுக்குறிப்பில், தாம் போதை மருந்து உட்கொண்டேன் என வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

ஆனால் அமெரிக்க விசா பெறுவதற்கான விண்ணப்பத்தில் இளவரசர் ஹரி தாம் முன்னர் போதை மருந்து உட்கொண்டதை மறைத்துள்ளார் என்றே கூறப்படுகிறது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

புதிய சிக்கலை ஏற்படுத்தலாம்

இதே விவகாரத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட டொனால்டு ட்ரம்ப், அப்போதே இளவரசர் ஹரியை நாட்டை விட்டே துரத்துவேன் என வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரவிருக்கும் நிலையில், ஹரி – மேகன் தம்பதிக்கு புதிய திட்டமிருக்கலாம் என அரச குடும்ப ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் மேகன் மெர்க்கல் உண்மையில் அமெரிக்க விரும்பி என்பதால், ட்ரம்பின் வருகை அவர்களுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தலாம். இதன் காரணமாகவே, அவர்கள் போர்த்துகல் நாட்டில் குடியிருப்பு ஒன்றை வாங்கியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, இளவரசி யூஜெனிக்கு சொந்தமான வீடு அமைத்திருக்கும் பகுதியிலேயே ஹரி – மேகன் தம்பதியும் குடியேற உள்ளனர். ஆனால் இன்னொரு நிபுணர் தெரிவிக்கையில், தேர்தல் களம் சூடு பிடிக்கும் போது மேகன் மெர்க்கல் தமது ஆதரவை எவருக்கும் தெரிவிக்காமல் இருந்தது புத்திசாலித்தனமான முடிவு என்றும்,

பிரித்தானிய அரச குடும்பத்தை அவமானப்படுத்தும் வகையில், இளவரசர் ஹரி குடும்பத்தை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றும் முடிவை டொனால்டு ட்ரம்ப் எடுக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.