;
Athirady Tamil News

வடக்கில் பலமிழக்கும் தமிழரசு கட்சி தொடர்பாக கம்மன்பில வெளியிட்ட கருத்து

0

வடக்கில் தமது கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து வருவதால் அரசுடன் இணைந்து அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மங்கள சமரவீரவுக்கும், சுமந்திரனுக்கும் நல்லுறவு இருந்தது. மங்கள ஜனாதிபதியாகி இருந்தால் சுமந்திரன் நிச்சயம் அமைச்சுப் பதவியை ஏற்றிருப்பார்.

இருப்பு வீழ்ச்சி
இன்று மங்கள உயிருடன் இல்லை. அடுத்தது சுமந்திரனுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சிறந்த நட்பு உள்ளது. இருவரும் இணைந்து செயற்படக்கூடியவர்கள்.

1960 காலத்துக்குப் பின்னர் அவர்கள் அரசில் அங்கம் வகிக்காததால் வடக்கில் அவர்களுக்குரிய வாக்கு வங்கி வீழ்ச்சியடைந்து வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2015 இல் 16 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன. 2020இல் அந்த எண்ணிக்கை 10 ஆகக் குறைந்தது. எனவே, அவர்களின் இருப்பு வீழ்ச்சியடைந்து வருகின்றது.

எனவே, அரச பலம் மூலம் அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு அவர்களுக்கு உள்ளது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.