வற் வரி குறைப்பு: வெளியானது அரசாங்கத்தின் நிலைப்பாடு
அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான வற் (VAT) வரி குறைப்பு தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும் என ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் அனில் ஜயந்த (Anil Jayantha) தெரிவித்துள்ளார்.
கம்பஹா – மிரிஸ்வத்தையில் நேற்றையதினம் (07) இடம்பெற்ற தொழில் முயற்சியாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியித்தின் உடனான பேச்சுவார்த்தையின் போதும், வற் வரி விலக்குகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
வற் வரி விலக்கு
அத்தோடு, பாடசாலை உபகரணங்களின்மீதான வற் வரியை தற்போதைய 18 சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாகக் குறைத்தல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்களை வாங்குவதற்கு பண கொடுப்பனவை வழங்குதல் ஆகிய இரண்டு முன்மொழிவுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் படி, கவனமாக ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு முதல் வாய்ப்பிலேயே வற் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அனில் ஜயந்த வலியுறுத்தியுள்ளார்.