கனடா – இந்தியா விரிசல்: ட்ரம்ப் வழங்கிய வாக்குறுதி!
கனடா(Canada) மற்றும் இந்தியாவுக்கிடையிலான(India) உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை தீர்த்துவைக்க தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) உதவுவார் என்று இந்திய – அமெரிக்க சமுதாயத்தின் முன்னணி தலைவரான சுதிர் பாரிக் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2024ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் வாக்குறுதி
அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் கனடாவிலுள்ள இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து தாங்கள் ட்ரம்புடன் கலந்துரையாடினேன்.
இதன்போது, அமெரிக்க ஜனாதிபதியாக தான் தேர்தெடுக்கப்பட்டால் கனடா அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான பிரச்சினையைத் தீர்த்துவைக்க உதவுவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
தற்போது ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். எனவே கனடா – இந்தியா பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கனடா – இந்தியா உறவு
இரு நாடுகளுக்கும் இடையில், வர்த்தகம், கலாச்சாரப் பரிமாற்றம், மாணவர் பரிமாற்றம், இரு நாடுகளிலும் மற்ற நாட்டவர்கள் வாழ்தல் என முக்கிய விடயங்கள் உள்ளன.
இதன் காரணமாக கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிரச்சினைகள் தூதரக ரீதியில்தான் தீர்த்து வைக்கப்படவேண்டும் ”என அவர் குறிப்பிட்டுள்ளார்.