ஆட்டத்தை ஆரம்பிக்கும் டொனால்ட் ட்ரம்ப்: ஈரானுக்கு காத்திருக்கும் பேரிடி!
அமெரிக்க (US) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), வெள்ளை மாளிகைக்கு திரும்பியவுடன் ஈரான் (Iran) மீதான பொருளாதாரத் தடைகளை வியத்தகு முறையில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது முந்தைய ஆட்சி காலத்தில் ட்ரம்ப், ஈரானின் புரட்சிகர காவலர்களில் குத்ஸ் படையின் தலைவரான இருந்த காசிம் சுலைமானியை படுகொலை செய்ய உத்தரவிட்டார்.
இந்த நிலையில், காசிம் சுலைமானி (Qasem Soleimani) படுகொலை செய்யப்பட்டதற்கு ஈரான் ட்ரம்பிற்கு எதிராக பழிவாங்க முயல்கிறது என்ற மதிப்பீட்டால் தீவிரமான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதாரத் தடை
அத்தோடு, சுலைமானியின் படுகொலைக்குப் பழிவாங்கும் வகையில் அவர் பதவியை விட்டு வெளியேறிய பிறகு, ஈரானிய முகவர்கள் அவரையும் முன்னாள் தேசிய பாதுகாப்பு உதவியாளர்களையும் படுகொலை செய்ய முயன்றதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
தெரியவந்த தகவல்களின் படி, முதன்மையாக ட்ரம்ப் ஈரானின் எண்ணெய் துறையில் விசேட கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், 2016-2020 க்கு இடையில் அவர் இயற்றிய பொருளாதாரத் தடைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, தெஹ்ரானை இராஜதந்திர ரீதியாகவும் நிதி ரீதியாகவும் தனிமைப்படுத்த ஒரு ஒருங்கிணைந்த உந்துதலை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஆதரவு
ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிராகவும், மத்திய கிழக்கு முழுவதும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி செய்வதற்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் தெஹ்ரானை ட்ரம்ப் குறி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் போல் அல்லாமல் ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பு மற்றும் எண்ணெய் வயல்களில் இஸ்ரேலிய தாக்குதலை ட்ரம்பின் நிர்வாகம் வலுவாக ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், ஈரான் மீதான அழுத்தத்தை ட்ரம்ப் எந்த அளவிற்கு அதிகரிப்பார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.